ராஜஸ்தானில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லஷ்மங்கரில் நடைபெற்ற உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, ஃபதேபூர் நோக்கி 9 பெண்கள் காரில் திரும்பினர். ஜெய்ப்பூர் - பிகானர் தேசிய நெடுஞ்சாலையில் சிகார் மாவட்டம் ஹர்சாவா கிராமத்திற்கு அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த லாரி, திடீரென தவறான திசையில் திரும்பியது. அப்போது, அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.இதையும் படியுங்கள் : தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு தாக்குதல்