மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தனது உயிர் பிரியாது என கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் இதை தெரிவித்துள்ள அவர், மோடி மீது காங்கிரசும் அதன் தலைவர்களும் எவ்வளவு வெறுப்பாக உள்ளனர் என்பதை கார்கேயின் பேச்சு காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் பிரச்சாரம் செய்த கார்கே, மேடையில் வைத்து உடல்நலம் குன்றியபோது , தேவையின்றி மோடியை தமது பேச்சில் இழுத்து விட்டதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் கார்கே மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியும் அவருக்காக பிரார்த்திப்பதாகவும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.