லட்டுக்கான நெய்யில் கலப்படம் இருப்பதாக பொதுவெளியில் தெரிவித்தது ஏன்? என சந்திரபாபுவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. லட்டு விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா? என்பதற்கு தெளிவு இல்லையே எனவும் கடவுள் தொடர்புடைய விவகாரத்தில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கண்டனம் தெரிவித்தது.