திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து, வரும் 3-ம் தேதி வரை சிறப்பு குழுவின் விசாரணை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.