உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரைக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இடையே ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி அவ்வழியாக யாரையும் அனுமதிக்காத நிலையில், சீரமைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.