கர்நாடகாவில் வேகமாக நிரம்பி வரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அணைக்கு தற்போது வினாடிக்கு 13 ஆயிரத்து 359 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 119 புள்ளி 20 அடியாக உள்ளது. இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 932 கன அடியாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.