ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியை ஒட்டிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட 2 பேரில் ஒருவர் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்ததாகவும், மற்றொரு ராணுவ வீரரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.