கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாதகமாக எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஏமனில் தனது கூட்டாளியை கொலை செய்த வழக்கில், கைதான கேரள செவிலியர் நிமிஷாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டையிலிருந்து அவரை காப்பாற்றக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, இவ்வழக்கில் தற்போதைக்கு எந்த பாதகமும் இல்லை என்றும் இந்த விஷயத்தில் புதிய மத்தியஸ்தர் ஒருவர் தலையிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.