தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.