இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் அவர் மீது பணமோசடி வழக்கில் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் சதீஷ் கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.