ஆர்சிபி அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம் என்றும், அவர்கள் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தன்னை சந்தித்து, பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறினார். நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியதால், தான் அங்கு சென்றதாகவும், தன்னை அழைத்ததற்கு பிறகு நடந்தது தெரியாது என்றும் கூறினார். மேலும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மைதானத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றும் சித்தராமையா கூறினார்.