இமாச்சலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தம்மால் எதுவும் செய்ய முடியாது என அலட்சியமாக பதிலளித்த இந்தி நடிகையும் மண்டி தொகுதி பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மண்டியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட கங்கனாவிடம், எம்பி என்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் என்ன அமைச்சரவையிலா இருக்கிறேன், உதவி செய்ய என அவர் அலட்சியமாக பதிலளித்தார்.கங்கனா ரணாவத்தின் பொறுப்பற்ற பேச்சு சொரணையற்றது என காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டித்துள்ளது. மண்டி மாவட்ட மக்கள் வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கும் போது, எம்பியான கங்கனா பல நாட்கள் கழித்து அங்கு சென்றது மட்டுமின்றி இப்படி பொறுப்பின்றி பேசியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.இதையும் படியுங்கள் : தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!