மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு வங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவரின் கொடூர பாலியல் கொலைக்கு நீதி கேட்டு 42 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த ஜூனியர் மருத்துவர்கள், கடந்த 21 ஆம் தேதி அதை கைவிட்டு பணிக்கு வந்தனர். ஆனால், தங்களது கோரிக்கைகள் குறித்து மேற்கு வங்க அரசு எந்த சாதகமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால், வேறு வழியின்றி மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்குவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.