நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் மட்டும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை இருக்காது எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானுடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.