பிரான்சில், இந்தோ-பிரெஞ்சு இராணுவப் படையினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். பிரான்சின் லா கவலேரியில் ((La Cavalerie)) உள்ள லார்சாக் கேம்பில் ((Larzac)) இந்திய இராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் மற்றும் பிரெஞ்சு இராணுவத்தின் 13ஆவது லெஜியன் ஹாஃப்-பிரிகேட்டை ((Foreign Legion Half-Brigade )) சேர்ந்த 90 வீரர்கள் SHAKTI-VIII கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இரு படைகளுக்கும் இடையேயான இயங்குதன்மை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.