பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரணின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக இந்தியா கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியேறியதாக கூறப்படுகிறது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக ஜேஎம்எம் கட்சி அறிவித்துள்ளது.