ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் முதல் கட்ட சட்டமன்ற தேர்தலில் 100 வயதை கடந்த சுமார் 1000 பேர் வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 43 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கும் முதற்கட்ட தேர்தலில் 100 வயதை கடந்த 462 ஆண்கள் மற்றும் 533 பெண்கள் என மொத்தம் 995 பேர் வாக்களிக்க உள்ளனர்.