டெல்லியில் திடீரென போராட்டத்தில் குதித்த ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், தங்களை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்சன் மண்டேலா சாலையை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாணவர்கள் தாக்கியதில் போலீசார் 6 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தலைவர் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.