ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதம் என்பதில் இருந்து சுற்றுலா தலமாக இந்திய ராணுவம் வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி பெருமிதம் தெரிவித்துள்ளார். மகாராஸ்டிர மாநிலம் புனேவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய அவர், சுற்றுலா பயணிகளுக்காக கார்கில், கால்வானில் போர்தளவாடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களையும், அவர்களின் தீரத்தையும் புரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 600க்கும் மேற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததில் ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக இந்திய ராணுவம் முக்கிய பங்காற்றியதாகவும் கூறினார்.