இண்டிகோ விமானம் டெல்லியில் தாமதமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவின் புகாருக்கு டெல்லி விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஒமர் அப்துல்லா பயணித்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இது குறித்து ஒமர் அப்துல்லா விமர்சித்திருந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாகவே விமானத்தை தரை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.