காரைக்கால் மீனவர்கள் 29 பேரின் சிறைக்காவல் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 28 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 29 மீனவர்களை கைது செய்த, இலங்கை கடற்படை அவர்களை சிறையில் அடைத்தது. இந்நிலையில் சிறைக்காவல் முடிந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் சிறைக்காவல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.