பண மோசடி வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனின் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாரத் சிமெண்ட் நிறுவன முதலீடுகளில் முறைகேடு நடந்ததாக கூறி 14 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில் ஜெகன் மோகன் பிரதிநிதியாக இருக்கும் ரகுராம் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் ஹாவாலா மூலம் பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஜெகன் மோகன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.