இருதரப்பு பிரச்சனைகளில் இந்தியா மூன்றாவதாக ஒரு நாடு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்றுக் கொண்டதில்லை எனவும் இனியும் ஏற்றுக் கொள்ளாது என பிரதமர் மோடி அமெரிக்க அதிபமர் டிரம்பிடம் தெரிவித்துள்ளமாக கூறப்படுகிறது. கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டுக்கு மோடி சென்றாலும் அங்கு அவரால் டிரம்பை சந்திக்க முடியவில்லை. அதன் பின்னர் டிரம்பின் விருப்பத்தின் படி மோடி அவருடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரடியாக பேசிய பின்னரே ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும், அந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்காவுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது எனவும் மோடி டிரம்பிடம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதன்விளைவுகளை அனுபவிக்கும்..