வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு தான், அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது என, அந்த போராட்டம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இந்தியர்களான தீப் ஹால்டர், ஜெய்தீப் மஜும்தார் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சாஹிதுல் ஹசன் கோகோன் ஆகியோர், மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, 'இன்ஷா அல்லாஹ் பங்களாதேஷ்; தி ஸ்டோரி ஆஃப் அன் அன்ஃபினிஸ்டு ரிவோலுஷன்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளனர்.