அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அதிபர் அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை சந்திக்கும் ஜெய்சங்கர், இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.