விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனையை இஸ்ரோ தொடங்கியுள்ளது. விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனையை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த 'அனலாக்' சோதனை லே பகுதியில் நடத்தப்படுகிறது