கத்தார் நாட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தனி-யை((Sheikh Tamim Bin Hamad Al-Thani)) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். இறையாண்மையை பாதுகாக்க நினைக்கும் கத்தார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் மோடி கண்டனங்களை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதையே இந்தியாவும் வலியுறுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.