இந்திய இறக்குமதிக்கான வரியை 15 முதல் 16 சதவிகிதமாக குறைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரைவில் எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்களுக்கு முக்கியமாக இந்த வரிக் குறைப்பை அதிபர் டிரம்ப் அனுமதிப்பார் எனவும் அதற்கு பிரதிபலமாக இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் நேற்று பேசியதாகவும் அப்போது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதித்த தாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்போம் என மோடி டிரம்புக்கு உறுதி அளித்த தாகவும் தெரிகிறது.