அமைச்சர்களுக்கு இரவு விருந்து கொடுத்தது மிகப்பெரிய குற்றமா? என செய்தியாளர்களிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமைய்யா கடிந்து கொண்டார். அம்மாநிலத்தில் முதலமைச்சர் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவும் நிலையில், திடீரென அமைச்சர்களுக்கு சித்தாரமைய்யா தனது இல்லத்தில் விருந்தளித்தார். இதனால் அவரிடம் இரவு விருந்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.