ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் ஏடிஜிபியுமான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உயரதிகாரிகள் சாதி ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக புரன் குமார் எழுதியிருந்த கடிதமும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.