வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்டில் 47 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27ஆயிரம் ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்துள்ளார்.