இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முரணாகப் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இருநாட்டு வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருதரப்பிலும் திருப்தியடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து பேசிய அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக், ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்’’ என்று தெரிவித்தார்.