15-ஆவது இந்திய அமெரிக்க சிறப்புக் கூட்டுப் படை பயிற்சியான வஜ்ர பிரஹார், அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் இன்று தொடங்குகிறது. இரு நாட்டு ராணுவத்தையும் சேர்ந்த தலா 45 வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்திய-அமெரிக்க ராணுவங்கள் இடையே நிகழாண்டில் நடைபெறும் இரண்டாவது கூட்டுப்பயிற்சி இதுவாகும்.