2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாக உள்ளதாக ஐநாவின் புதிய மக்கள்தொகை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்வதாகவும், 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 170 கோடியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளதாகவும், இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற எண்ணிக்கையை விடக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு, கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.