பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் ஆடிப்பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினாவை தொடர்ந்து 4 ஆவது நாடாக, பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெறும் 17ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதற்காக Rio de Janeiro சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய புலம் பெயர்ந்தோர், ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலாசார நடனத்தை நடத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.