நேற்று சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்ய இந்திய பங்குசந்தைகளில் இன்று மீண்டும் இறக்கத்துடன் வர்த்தகம் தொடங்கியது. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 366 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்கு சந்தை நிப்டி 129 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 337 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் விலை உயர்ந்த நிலையில், மாருதி , டாட்டா மோர்டார்ஸ், இந்தஸ்இண்ட் வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் சந்தையின் ஆரம்பத்தில் விலைச்சரிவை சந்தித்தன.