ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு 365 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.