இருதரப்பு வர்த்தகத்தில் இந்திய ரூபாயையும், மாலத்தீவின் ரூபிய்யாவையும் பயன்படுத்தும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மாலத்தீவு நிதி ஆணைய கவர்னர் அகமது முனவ்வர் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நடப்பு கணக்கு பரிவர்த்தனை, மூலதன கணக்கு பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை இனி இந்திய ரூபாய் அல்லது மாலத்தீவு ரூபிய்யாவில் நடந்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இரு நாடுகளிலும் உள்ள ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது நாட்டின் செலாவணியை பயன்படுத்தி பணம் செலுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என அறிக்கை என்றில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.