இந்தியா-சீனா இடையே சுமூகமான சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வியட்நாம் தலைநகர் லாவோஸ் நகரில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடு களை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு இடையே சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் டாங் ஜானை சந்தித்து பேசிய ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்கு மோதல் போன்ற சம்பவங்கள் வரும்காலங்களில் ஒருபோதும் நடக்கக் கூடாது என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு எல்லையில் நிலவிய இந்தியா-சீனா இடையேயான அசாதாரண சூழல் சமீபத்தில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.