இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவைகள் துவக்குவது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை பற்றி விரைந்து முடிவெடுக்க இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.இந்தியா வந்துள்ள சீன துணை வெளியுறவு அமைச்சர் Sun Weidong வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து பேசிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கால்வன் தாக்குதலுக்குப் பிறகு இந்திய சீன உறவுகள் பின்னடைவை சந்தித்த நிலையில், கடந்த சில மாதங்களாக மீண்டும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக,பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யவும், விமானப் போக்குவரத்து துறையில் இயல்பான நிலையை ஏற்படுத்தவும் கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளும் முடிவு செய்தன.