டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற முத்தையா முரளிதரனின் சாதனை அஸ்வின் சமன் செய்துள்ளார். இருவரும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.