தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சார்பில் உணவு, மருந்து போன்ற நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதோடு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.