ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா ஏழாவது முறையாக தேர்வாகியுள்ளது. 2026 ஜனவரி 1 முதல் 2028 டிசம்பர் 31 வரை இந்தியா உறுப்பினராக செயல்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து ஐநா ஆணையத்தின் இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ((Parvathaneni Harish)) கூறுகையில், ஆணையத்தின் உறுப்பினரானதன் மூலம் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரத்துக்கும் இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிய வருகிறது என்றார். அடுத்த மூன்று ஆண்டுகளிலும் மனித உரிமைகளுக்காக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும் என அவர் கூறினார்.