டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விமானங்கள் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை அடைய வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகளை சோதனை செய்யவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் எடுத்துவரும் கைப்பைகள் உள்ளிட்டவைகள் தீவிர சோதனைக்குப் பிறகு குறிப்பிட்ட எடைக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.