தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்ததன் காரணமாக டெல்லியில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். காற்று மாசுபாட்டால் தலைநகரில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்தது. அதன் படி மக்கள் தீபாவளிக்கு முன்பும், தீபாவளியன்றும் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இது காற்று மாசுபாட்டு மீண்டும் அதிகரித்தது. காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு நண்பகலுக்கு பிற்கு 451 ஆக அதிகரித்து தேசிய சராசரியை விட 1.8 மடங்கு அதிகமாக இருந்தது.