உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் 300 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ஆலையில், 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை குறிவைத்து அழிக்கும் உலகின் அதிவேக ஏவுகணைகளின் உற்பத்தி துவங்க உள்ளது. இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸால், ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது.