அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை விட்டும் வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியது. குறிப்பாக சோனித்பூர் பகுதியில் வீடுகள், விளை நிலங்கள் நீர் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் படகு மூலம் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.