பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அப்படி மாநிலத்தில் புதிதாக 2 கோடியே 60 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு சராசரியாக 39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும், மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்றார். இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகம் என்றும் அத்தனை கோடிக்கு எதிர்க்கட்சியினர் எங்கே போவார்கள் என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.