சட்டவிரோத செயல் : இந்திய நேபாள எல்லையில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம், சீமாஞ்சல் பகுதியில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா, எல்லை கண்காணிப்பை பலப்படுத்துவது, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது, சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகளை கண்டறிவது உள்ளிட்டவை குறித்து உரையாற்றினார். Related Link டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விடுதலை