பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேற மாட்டேன் என பிரதமர் மோடி முன்னிலையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உறுதியளித்தார். புர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தனது சொந்த கட்சிக் காரர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்தியா கூட்டணிக்கு சென்றதாக விளக்கம் கொடுத்தார். ஆனால் அவர்களுடன் இனி ஒருபோதும் இருக்க முடியாது என்ற அவர், வருங் காலங்களில் எங்கும் செல்லப் போவதில்லை என கூறி பிரதமரின் கைத்தட்டல்களை பெற்றார்.